Rebellious Worship
*மேலை நாட்டு ஆங்கில திருச்சபை வீழ்ச்சிக்கும்: நான்கு குரலமைப்பு பாடகர் குழு முறைமைக்கும் எத்தகைய தொடர்பு உள்ளது என்பதை வேத ஆதாரங்களோடு பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு காணுங்கள்.*
பரிசுத்த வேதாகமத்தில் தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகங்கள் *மறை பொருள் விளக்க நூல்கள்* என்றழைக்கப்படுகின்றன. இதன் செய்தியானது மூன்று காலங்களுக்கும் பலவித கோணங்களில் பலப் பொருள் விளக்கங்கள் அளிக்கின்றது.
தானியேல் 8ம் அதிகாரம்:
வசனம் 2: தானியேல் சூசான் அரன்மனையில் இருக்கும்பொழுது ஒரு தரிசனம் காண்கிறார் தான் ஊலாய் ஆற்றங்கரையில் இருப்பதாக.
வசனம் 3: இதில் இரண்டுக் கொம்புகளுள்ள ஆட்டுக்கடா என்பது தேவன் தன்னை ஆராதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆதாமுக்கு ஒப்பிடப்படுகின்றது. அதன் இரண்டுக் கொம்புகள் *காயீன் மற்றும் ஆபேல்* எனப்படுகிறது.
ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது என்பதன் பொருளாக *ஆபேலின் பலிகள்* அதாவது *ஆபேலின் ஆராதனை* இறைவனின் பார்வையில் உயர்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதை குறிக்கிறது.
உயர்ந்தக் கொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று என்பது ஆபேல் இரண்டாவதாக பிறந்தவன் என்பதைக் குறிக்கிறது.
வசனம் 4: ஆதாம் தான் ஏதேன் தோட்டத்திலிருந்து அதாவது *தேவனின் பிரசன்னத்தில்* இருந்து தள்ளப்பட்டதால் விரக்தியடைந்து தன் சுயபெலத்தைச் சார்ந்திருக்கிறதை குறிக்கிறது.
வசனம் 5: மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா என்பது *மேற்கத்திய இசையோடு* ஒப்பிடப்படுகிறது.
*கால் பாவாமல்* தேசத்தின் மீதெங்கும் சென்றது என்பதும் கர்த்தர் யோபின் வீட்டில் (யோபு 1:7) சாத்தானைப் பார்த்து நீ எங்கேயிருந்து வருகிறாய் என்று கேட்டபொழுது சாத்தான் பிரதியுத்தரமாக *பூமியெங்கும் உலாவி* அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்று கூருவதும் ஒப்பிடப்படுகிறது.
ஆர்கன் வாசிக்கிறவர்களிடம் கேட்டால் எளிதில் புரியும் அவர்கள் வாசிக்கும்பொழுது வலது மற்றும் இடது கைகளின் இசை குறிப்பை (மியுசிக்கல் நோட்ஸ்) மேலே கீழே என்று ஒரே நேரத்தில் பார்த்து வாசிக்க இயலாது அதற்காக அவர்கள் தங்கள் கண்களை குவிந்த நிலையில் அதாவது *கண்களுக்கு நடுவே கொம்பு* வளர்ந்தது போல விசேஷித்த பார்வையுடன் பார்க்கவேண்டியுள்ளது.
வசனம் 7: காயீன் ஆபேல் மற்றும் ஆதாமின் இறுதி நிலையைக் காட்டுகின்றது. *ஆராதிக்கும் பணிசெய்வோர்* நீக்கப்படுகின்றனர்.
வசனம் 8: நாலு திசைகளுக்கும் எதிராய் *நாலு கொம்புகள்* என்பது ஆங்கில வேதாகமத்தில் *(நான்கு காற்றுகள்)* என்று குறிப்பிடப்படுகின்றது. *ஆர்கன் நான்கு காற்றுத்தொனியை வெளியேற்றும் இசைக்கருவி* என்பது நாம் அறிந்ததே.
ஆதியில் தேவன் மனிதரை தம்மை ஆராதிப்பதற்காக ஏற்படுத்தும் முன்னதாக லூசிப்பர் என்பவனே *நாலு திசைகளிலும் அமர்த்தப்பட்ட வானசேனைகளை கட்டுப்படுத்தி இயக்கி பாடகர் குழுவை நிர்வகித்து தேவனை ஆராதித்தான்* என்பது நாம் அறிந்ததே.
வசனம் 9: *சிங்காரமான தேசம்* என்பது கிறிஸ்தவ நாடுகளான *இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளுடன்* ஒப்பிடப்படுகின்றது. இங்ஙனம் *லூசிப்பர் பாடகர்குழு முறைமை* கிறிஸ்தவ நாடுகளின் திருச்சபைகளுக்குள் ஊடுருவிக்கொள்கின்றது.
வசனம் 10: *நட்சத்திரங்கள் என்பது வான தூதர்களை குறிக்கிறது* அவர்கள் கீழே தள்ளப்படுகின்றனர்.
வசனம் 11: தேவன் விரும்பிய *அன்றாட ஆராதனை மற்றும் பரிசுத்த ஸ்தானம் நீக்கப்பட்டது.*
வசனம் 12: ஏறெடுக்கப்படும் நமது ஆராதனை *தேவன் விரும்பாத இசை முறைமையில் ஏறெடுக்கப்பட்டதால் தேவனுக்கு நாம் ஏறெடுக்கும் ஆராதனை நமக்கு தெரியாமலேயே சாத்தானுக்கு உகந்ததாயிற்று.*
வசனம் 13-14: இந்த தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று பரிசுத்தவான் கேட்ட கேள்விக்கு *இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும் பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்ற பதிலானது இரண்டாயிரத்து முந்நூறு வருடங்களை குறிக்கிறது.*
வரலாறு:
*ஆர்கன் கி.மு. 300ல் அறிமுகமாகிறது. ரோமப் பேரரசரை ஆராதிப்பதற்குப் பயன் படுத்தப்படுகிறது. ரோமப் பேரரசில் அரசரே மீட்பராக மனுக்குலத்திற்கு இரட்சிப்பு அளிக்கக்கூடியவராக தொழுது கொள்ளப்பட்டார்.*
*உலகின் பெரும்பகுதியை ஆண்டு வந்த அதே ரோமப் பேரரசு இயேசு கிறிஸ்து பிறந்த காலக்கட்டத்தில் யூதேயாவில் நேரடி ஆட்சியைப் பிடிக்க முற்படுகிறது.*
*இந்த காலக்கட்டத்தில்தான் மீட்பர் இயேசு பிறந்து தேவன் நம் அருகில் நம்முடன் இருக்கிறார் என்ற இறை நம்பிக்கை மீட்பின் செய்தியை யூதமக்களிடையே வழங்குகிறார்.* இதைக்கண்ட ரோமானியர்கள் இச்செய்தியினால் யூதர்கள் ஒன்று சேர்ந்தால் யூதேயாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அரிது என்றறிந்து இயேசுவை கொல்ல வகை தேடி தேவாலயத்தைக் குறித்து பொய்க் குற்றச்சாட்டை உண்டாக்கி *யூதர்கள் மனதை குருடாக்கி யூதர்களாலேயே இயேசுவை கொலை செய்கின்றனர்.*
*கிறிஸ்தவத்தை நேரில் நின்று அழிக்க முடியாது* என்பதை உணர்ந்த ரோமப்பேரரசு இதேப் போன்று நம்மை வைத்தே நம்மை அழிப்பதற்கு *அநேக ரோமானிய கண்ணிகளை நம் திருச்சபை ஆராதனை முறைகள் மீது திணித்துள்ளது.*
*கேட்டின் மகன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.*
(2 தெசலோனிக்கேயர் 2:4)
*1700ல் பியானோ அறிமுகமாகிறது இதன் ஸ்ட்ரிங் அமைப்பு தாவீதரசர் பயன்படுத்திய இசைக்கருவிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.*
*18ம் நூற்றாண்டில் கிறிஸ்துவின் சுவிசேஷம் வேகமாக பரவுகிறது சுவிசேஷப்பணியிலும் தேவாராதனையிலும் பயன்படுத்த தேவனுக்கு உகந்த இசைக்கருவியாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையிலேயே அது வெகுவேகமாக அதிகமாக தியேட்டர்களில் சாராய சூதாட்ட நடன கிளப்புகளில் பயன்படுத்தப் படுகின்றது.*
*பியானோவை தேவாலயத்திற்குள் தேவாராதனையில் பயன்படுத்தலாம் என்ற கருத்து வரும்பொழுது தியேட்டர்களில் சாராய சூதாட்ட நடன கிளப்புகளில் பயன்படும் பியானோவை எவ்வாறு தேவாலயத்திற்குள் தேவாராதனையில் பயன்படுத்தலாம் என்று சபை மக்கள் மூடத்தனமாக எதிர்க்கின்றனர்.*
இந்த வேளையில் குறைவான புலக்கத்திலிருக்கம் ரோமானிய ஆர்கன் எளிதாக தேவாலயத்திற்குள் பெரும் இடத்தை பிடித்துக் கொள்கின்றது.
*பரிசுத்த வேதாகமம் பரிந்துரைக்கும் ஆராதனையின் இசைமுறைமை:*
ஏதேன் தோட்டத்திற்கு முந்தைய லூசிபரின் பாடகர் குழு முறைமை வேண்டாமென்றுதான் *கின்னரம் நாகசுரம் ஆகிய இசைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆராதனை முறைமையை தேவன் யூபால் என்பவர் மூலமாக ஆதியாகமம் 4:21ல் பரிந்துரைக்கிறார்.*
*இதனை புரிந்து கொண்ட தாவீதரசர் வழி சாலொமோன் தேவனின் உந்துதலோடு தம்புரு யாழ் எக்காளம் கைத்தாளம் கொண்டமைக்கப்பட்ட இசைமுறைமையோடு ஏகசத்தமாய் அதாவது ஒரே குரலில் பாடும் பாடகர் குழு முறைமை அமைத்து கர்த்தருடைய மகிமையின் மேகத்தை தேவனின் பிரசன்னத்தை ஆலயத்திற்குள் வர வழிவகுக்கிறார் (2 நாளாகமம் 5: 12-14)*
1 நாளாகமம் 15:19ல் கூறப்படும் *பஞ்சலோக கைத்தாளங்களின் வீயுகத்தில் உருவாக்கப்பட்ட ஹெவி மெட்டல் இசைமுறைமை* சாத்தானை ஆராதிக்கும் இசைமுறைமையாக அபகரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பண்டிகை ஆராதனையிலும் பின் பவனி கீதமாக சங்கீதம் 150 பாடுகிறோம். அதில் யாரை துதிக்க சொல்கிறோம்? எங்கு போய் துதிக்க சொல்கிறோம்? எத்தகைய இசை முறைமையால் துதிக்க சொல்கிறோம்?
சொல்லுகிற நாமே செய்யாதபொழுது! அவ்வாறு எவர் செய்வார்?
லூக்கா 2:13ல் *பரம சேனையின் திரள் உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் என்று பாடியது மேய்ப்பர்களுக்கு தெளிவாகக் கேட்கின்றது. இன்று நான்கு குரலில் பாடகர் குழு பாடும் பொழுது வார்த்தைகள் தெளிவாகக் கேட்கிறதா?*
வெளிப்படுத்தல் 14: 2-3 *இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர் பாடியபொழுது ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன் என்று திவ்ய வாசகனாகிய யோவான் கூறுவதிலிருந்து ஒரு குரல் பாடகர் குழு என்பது புலனாகின்றது.*
*தேவன் விரும்பாத வேண்டாமென்று கூறிய இசைமுறைமை வழியாக நாம் ஏறெடுக்கும் ஆராதனை இறைவனுக்கு உகந்ததாயிருக்குமா?*
*தேவன் விரும்பிய பரிந்துரைத்த இசைமுறைமைகள் இசைக்கருவிகள் தன்னை மகிமைப்படுத்துவதை விட்டு விட்டு சினிமாவில் பிறமதங்களில் மகிமைப்படுத்துகின்றது அவருக்கு பிரியமானதாயிருக்குமா?*
மேலை நாட்டு ஆங்கிலிக்கன் திருச்சபை இன்று:
*ஆலயங்கள் இருக்கிறது ஆராதனை இல்லை.*
*திருநாட்களுக்கு விடுமுறை இருக்கிறது ஆனால் தேவாலயம் செல்ல யாருமில்லை.*
*ஆலயங்கள் சினிமா தியேட்டர்களாகவும் நூலகங்களாகவும் சாராய கிளப்புகளாகவும் மாறி விட்டன.*
*ஆலயங்களில் பயன்படுத்தப்பட்ட வேதபுத்தகங்கள் இசைக்குறிப்பு நூல்கள் தேவாலய மணிகள் நமக்கு பழைய பொருட்களாக வந்து கொண்டிருக்கின்றன.*
*முறை கேடான திருமணங்கள்* (ஆணுக்கும் ஆணுக்கும்)
*நமக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை கொண்டு வந்தவர்களின் நிலை இவ்வாறாக உள்ளது.*
*நாளை நமது நிலை?*

Comments
Post a Comment