Posts

Showing posts from December, 2019

Rebellious Worship

Image
*மேலை நாட்டு ஆங்கில திருச்சபை வீழ்ச்சிக்கும்: நான்கு குரலமைப்பு பாடகர் குழு முறைமைக்கும் எத்தகைய தொடர்பு உள்ளது என்பதை வேத ஆதாரங்களோடு பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு காணுங்கள்.* பரிசுத்த வேதாகமத்தில் தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகங்கள் *மறை பொருள் விளக்க நூல்கள்* என்றழைக்கப்படுகின்றன. இதன் செய்தியானது மூன்று காலங்களுக்கும் பலவித கோணங்களில் பலப் பொருள் விளக்கங்கள் அளிக்கின்றது. தானியேல் 8ம் அதிகாரம்: வசனம் 2: தானியேல் சூசான் அரன்மனையில் இருக்கும்பொழுது ஒரு தரிசனம் காண்கிறார் தான் ஊலாய் ஆற்றங்கரையில் இருப்பதாக. வசனம் 3: இதில் இரண்டுக் கொம்புகளுள்ள ஆட்டுக்கடா என்பது தேவன் தன்னை ஆராதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆதாமுக்கு ஒப்பிடப்படுகின்றது. அதன் இரண்டுக் கொம்புகள் *காயீன் மற்றும் ஆபேல்* எனப்படுகிறது.  ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது என்பதன் பொருளாக *ஆபேலின் பலிகள்* அதாவது *ஆபேலின் ஆராதனை* இறைவனின் பார்வையில் உயர்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதை குறிக்கிறது.  உயர்ந்தக் கொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று என்பது ஆபேல் இரண்டாவதாக பிறந்...